Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் கேனுடன் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி …!!

திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம்  ஒடச்சந்திரம் விராலிப்பட்டியில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர் பாண்டி மாற்றுத்திறனாளியான இவர் தனியார் மருத்துவமனையில் பணி செய்து வருகிறார். இந்நிலையில் பேருந்தின் முலம் நாள்தோறும் வேலைக்கு செல்லும் பாண்டி தற்போது குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும் குடும்பம் வறுமையில் சிக்கித் தவிக்கும் தனக்கும் அரசு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அப்போது தான் வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்த பாண்டி தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் காவல்துறையினர் பாண்டியை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |