அமெரிக்காவில் சிறுவர்களை மண் அள்ளும் இயந்திரத்தில் கொண்டு சென்றதால் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள Roanoke என்ற பகுதியில் மண் அள்ளுவதற்கு பயன்படுத்தும் ஜேசிபி இயந்திரத்தில் விஜேந்தர் என்ற 40 வயதுடைய நபர், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை அழைத்து சென்றுள்ளார். அதில் மண் அள்ளக்கூடிய பகுதியில் அவரின் குழந்தைகள் சிவ்ராஜ்(11) மற்றும் சோனாக்ஷி(7) இருந்துள்ளார்கள். அந்த சமயத்தில் என்ன நிகழ்ந்ததோ மண் அள்ளக்கூடிய பகுதியை விஜேந்தர் கீழே இறங்கியிருக்கிறார்.
அப்போது அதிலிருந்த இரண்டு குழந்தைகளும் கீழே விழுந்தனர். இதில் எதிர்பாராத விதமாக வாகனம் அவர்கள் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் வாகனத்திலிருந்து சிறுவர்கள் இருவர் மற்றும் பெரியவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவமனையில் உள்ளனர்.
இந்நிலையில் விஜேந்தர் மீது 2 கொலை குற்றச்சாட்டுகள், சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியது மற்றும் கடுமையான ஆயுதத்தினால் தாக்கியது போன்றவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.