Categories
மாநில செய்திகள்

மண் காப்போம் திட்டம்…. 25,000 கிலோமீட்டர் பைக் பயணத்தை முடித்த சத்குரு….!!!!!!!!

உலக அளவில் மண்வளத்தை பாதுகாப்பதற்காக ஈஷா நிறுவனர் சத்குரு தொடங்கியிருக்கின்ற மண் காப்போம் இயக்கத்திற்கான 30 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தில் 25 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் முடித்த சத்குரு ஜக்கிவாசுதேவ் இன்று மும்பை வந்து சேர்கின்றார். மண்ணை காப்பாற்றுங்கள் என்னும் இயக்கம் மற்றும் பூமியின் மீதான ஆக்க பூர்வமான அணுகுமுறையை தூன்வதற்காக உலகளாவிய இயக்கமாகும். இதில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் அவர்களின் குடிமக்கள் சூழலியல் மற்றும் மண்ணுக்கு உயிர் வழங்கும் கொள்கைகளில் விரும்புகிறார்கள் என்பதை காட்டுவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

நாசிக்கில் தேஷ்தூத்   மற்றும் மராட்டிய வித்யா பிரச்சார ஜமாத் இணைந்து நடத்திய சேவ் சேயில் நிகழ்வில் பேசிய சத்குரு நாம் மண்  அழிவை நோக்கி நகர்ந்தால் நம்மில் அதிகமானோர் அழிந்து விடுவோம். மேலும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் மனித நாகரீகம் அழிந்து விடும் சில நாட்கள் நமது மனிதநேயம் மரத்துப் போய்விடும் என  எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது மண்ணை காப்போம் பயணத்தின் இறுதி கட்டமாக இந்திய பயணத்தில் இருக்கும் சத்குரு தனது 300 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை இருபத்தி ஐயாயிரம் கிலோ மீட்டருக்கு மேல் பயணத்தை மேற்கொண்டு நாசிக் நகரத்தை  வந்தடைந்துள்ளார். மண்ணை காப்போம் என்னும் இயக்கத்திற்கு 3.50 அதிகமான மக்களின் ஆதரவை நிரூபிக்க ஒரு தனி மோட்டார் சைக்கிளில் 24 நாடுகளில் 30,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் மேற்கொள்கிறார். குடிமக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கும் போது அது சுற்றுச் சூழலியல் பிரச்சினைகள் தேர்தல் பிரச்சினைகளாக மாற வழி வகுக்கும் இது அரசாங்கங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதையும் சுற்றுச்சூழல் தீர்வுகளை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான வரவு-செலவு திட்டங்களையும் உறுதி செய்யும் என்னும் அடிப்படையில் ஈஷா அமைப்பின் சார்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்.

நேற்று நாசிக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேடிஎச்எம் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜனக் சர்க்கார் நிர்வாக இயக்குனர் தேஷ்தூத் போன்றோர் சத்குருவிற்கு மராட்டிய ஆட்சியை வீரத்தையும் வீரத்தை சித்தரிக்கும் பாரம்பரிய தலைப்பாகை பரிசாக வழங்கியுள்ளார். நாசிக்கின்  பஞ்ச தத்வா   கோதாவரி நதியின் நீரை உள்ளடக்கிய ஐந்து பொருட்களை பரிசாக பெற்றுள்ளார். இந்த நிலையில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் அடுத்த 10-15 வருடங்களில் நாம் குறிப்பிட மாற்றத்தை உருவாக்க முடியும் காலதாமதம் செய்தால் 25 – 40 ஆண்டுகளுக்குப் பின் மண்ணின் வளர்ச்சி சாத்தியமற்றதாக விடும் என எச்சரித்த சத்குரு மண்ணை புதுப்பிப்பதற்கு தேவையான கொள்கைகள் உருவாக்கப்படும் வரை மக்கள் தங்கள் குரலை உயர்த்தி மண் வளத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |