Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மண் வளத்தை பாதுகாப்போம்… சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்…. கொடியசைத்து வைத்த எம்.எல்.ஏ….!!

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உலக மண் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மண் காப்போம் இயக்கம் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் கோட்டையில் இருந்து ஆரம்பித்து அண்ணா சாலை வழியாக சென்று ஈஷா யோகா மையத்தில் முடிவடைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் ஈஷா மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு தலைமை தாங்கிய நிலையில் எம்.எல்.ஏ கார்த்திகேயன் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து தன்னார்வலர்களான உமா சந்திரன், சிவசங்கரன், ரமேஷ், சதீஷ், மணிவண்ணன், குணசீலன் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர். இதேபோன்று தமிழகத்தில் சுமார் 60 இடங்களில் மண் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |