ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மதகுரு முக்ததா அல்-சதர் என்பவர் அரசியலில் இருந்து விலக முடிவை அறிவித்துள்ளார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிபர் மாளிகை நோக்கி புறப்பட்டு சென்றனர். அப்போது அரசு கட்டிடத்தின் வெளியே இருந்த சிம்ண்டாலான தடுப்புகளை அடித்து உடைத்தனர். அதனை தொடர்ந்து உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பணியில் குவிக்கப்பட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஏற்பட்ட வன்முறையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மக்களின் 300 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.
இதற்கிடையில் போராட்டக்காரர்களின் வன்முறை மற்றும் ஆயுத பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி அதுவரை உண்ணாவிரதம் போராட்ட தொடரும் என்று மதகுரு அறிவித்துள்ளனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில், உடனடியாக அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலானது. இதுகுறித்து ஐநாவின் பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த பதற்ற நிலையிலையை தணிக்கவும் மற்றும் வன்முறை பரவி விடாமல் தவிர்ப்பதற்கும் வேண்டிய நடவடிக்கைகளை தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.