Categories
சினிமா தமிழ் சினிமா

“மதத்தை கடவுள் உருவாக்கியது அல்ல, நாமே உருவாக்கியது”… அஞ்சலி நாயர் ஓபன் டாக்…!!!!!

தமிழ் சினிமா உலகில் நெடுநெல்வாடை திரைப்படத்தின் மூலம் அஞ்சலி நாயர் அறிமுகமானார். பின் டாணாக்காரன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். தற்போது இவர் நடிப்பில் காலங்களில் அவள் வசந்தம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றார்கள்.

இந்த நிலையில் இவர் தனது அனுபவம் குறித்து அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, எனது பெற்றோர்கள் ராணுவத்தில் இருக்கின்றார்கள். இதனால் சிறு வயதிலிருந்து தைரியமான பெண்ணாக வளர்ந்தேன். முகநூலில் எனது புகைப்படத்தை பார்த்து நெடுநல்வாடை திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றேன்.

அஞ்சலி நாயர் என்ற பெயரை மாற்றச் சொன்னார்கள். ஆனால் நான் அம்மா, அப்பா வைத்த பெயரை மாற்ற முடியாது என கூறிவிட்டேன் சினிமாவுக்காக பெயரை மாற்றுவது சரியானது அல்ல. தமிழில் புதிதாக விஜய் சேதுபதியுடன் ஒரு திரைப்படத்திலும் மற்றொரு திரைப்படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கின்றேன்.

நல்ல நோக்கத்திற்காக எனது கையில் எல்லா மத சின்னங்களையும் பச்சை குத்தி இருக்கின்றேன். மதத்தின் பெயரால் பிளவுவரக் கூடாது. மதம், கடவுள் உருவாக்கியது அல்ல, நாமே உருவாக்கியது. கடவுள் அவரின் குழந்தைகளாகவே நம் அனைவரையும் பார்க்கின்றார். மதத்தின் பெயரால் வேறுபட்டு இருப்பது கடவுளுக்கே எதிரானது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |