மதனகோபாலசாமி கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவில் ராமர் அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா வந்துள்ளார்.
பெரம்பலூரில் அமைந்துள்ள மதனகோபால சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் சாமி வீதியில் உலா வருகின்றது. அதன் படி மூன்றாம் நாள் திருவிழாவான நேற்று இரவு பெருமாள் ராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்துள்ளார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். இதையடுத்து வருகிற 15-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.