Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மதம் பிடித்து விட்டதா….? பாகனை கொன்ற யானை…. அதிகாரிகளின் தகவல்…!!

பாகனை கொன்ற யானையை மர கூண்டில் அடைத்து பயிற்சி அளிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அட்டகாசம் செய்த அசோக் என்ற யானை கொண்டு வரப்பட்டது. கடந்த 16-ஆம் தேதி பாகன் ஆறுமுகம் அசோக் யானையை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது யானை ஆறுமுகத்தை தாக்கி கொன்றது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, அசோக் யானைக்கு தற்போது மதம் பிடித்துள்ளதாக தெரிகிறது. இதனால் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின்படி யானைக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் யானைக்கு மதம் குறைந்ததும் வரகளியாறு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மர கூண்டில் ஒரு மாதம் அடைத்து வைத்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |