மதம் மாற மறுத்த காதலியை காதலன் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத் மாவட்டத்தில் இருக்கும் பல்லாப்கார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா தாமர். பி.காம் இறுதியாண்டு படிக்கும் இவர் இஸ்லாமிய மதத்தை சார்ந்த தௌசிஃப் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தௌசிஃப் நிகிதா தாமரை இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் நிகிதா தாமர் தான் மதம் மாற போவதில்லை என்று உறுதியாக கூறிவிட்டார். இதனால் கோபமடைந்த தௌசிஃப் தான் காதலித்த பெண் என்றும் பாராமல் கொலை செய்ய முடிவெடுத்தார். இதனையடுத்து நிகிதாவை தௌசிஃப் சுட்டு கொலை செய்தார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.