வீரமே வாகை சூடும் படத்திற்கு பின் விஷால் நடிப்பில் உருவாகி வருகின்ற படம் விஷால். இவர் நடிப்பில் தற்போது லத்தி, இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வருகின்றார். மேலும் இந்த படத்தில் விஷால் போலீசாக நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. சமீபத்தில் நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவிற்கு குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த ட்விட்டர் கமெண்டில் மீண்டும் மாமா ஆனதில் மிக்க மகிழ்ச்சி. இதுக்கு மேல என்ன வேணும்? எனது தங்கை ஐஸ்வர்யாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும், பெற்றோரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ்” என பதிவிட்டுள்ளார். விஷாலின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவந்தாலும், அவர் மதம் மாறி விட்டாராம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.