செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக எம்.எல்.ஏ மதராச பள்ளிகளை மூட வேண்டும் என கூறியது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தாவணகரே மாவட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ-வும் கர்நாடக முதல்-மந்திரியின் அரசியல் செயலாளருமான ரேணுகாச்சார்யா செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியுள்ளதாவது, “மதராச பள்ளிகளில் அப்பாவி மாணவர்களிடையே தேசவிரோதம் விதைக்கப்படுகிறது.
மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பாடம் கற்பிக்கப்படுவதால் மதராச பள்ளிகளை தடை செய்ய கோரி கர்நாடக முதல்-மந்திரி மற்றும் கல்வி மந்திரியிடம் கேட்டுக் கொள்வதாக” பேசியிருக்கின்றார். இவரின் இந்தப் பேச்சால் கர்நாடக மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.