2021ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வியடைந்ததற்கு முகமது ஷமியை மதரீதியாக விமர்சித்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அவர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. இதில் பாகிஸ்தானும், இந்திய அணியும் மோதியுள்ளது. அவ்வாறு முதல் லீக் போட்டியில் மோதிய இந்திய அணி படுமோசமாக சொதப்பி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த தோல்விக்கு முகமது ஷமி தான் காரணம் என்று சில கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும் அவரை மதரீதியாக விமர்சித்துள்ளார்கள்.
ஆனால் சக வீரர்களும், முன்னாள் வீரர்களும் முகமது ஷமிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்கள். இந்நிலையில் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது முகமது ஷமி இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மதவெறிக்கு மருந்து என்பது கிடையாதுஎன்றும், தன்னை இப்படி விமர்சித்தவர்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களே கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை விமர்சித்தவர்கள் இந்தியர்களே கிடையாது என்று கடுமையாக சாடியுள்ளார்.