மதிகெட்ட நடவடிக்கைகளுக்கு திமுகவில் இடமில்லை என்று டிஆர்பி ராஜா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மதுரவாயில் பகுதியில் இருக்கும் அம்மா உணவகத்தில் பதாகைகள் திமுகவினரால் உரைக்கப்பட்டது .அந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து கழகத்தின் சார்பாக மீண்டும் அந்த பதாகை உடைத்த இடத்திலேயே வைக்கப்பட்டது. இதையடுத்து மன்னார்குடியின் எம்எல்ஏ டிஆர்பி ராஜா “ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் மதிகெட்ட நடவடிக்கைகளுக்கு இடமில்லை” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.