Categories
மாநில செய்திகள்

மதிப்புகூட்டு பொருட்கள் தயார் செய்ய…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு……!!!!!

தக்காளியை பயன்படுத்தி மதிப்புகூட்டு பொருட்கள் தயார் செய்ய தனியார் தொழில் முனைவோர் முன்வந்தால் மானியத்துடன்கூடிய கடன் உதவிகளை அரசு வழங்கும் என்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதம்

அதிமுக தாமோதரன் “கோவை மாவட்டம் கிணத்துக் கடவு பகுதியில் தினசரி காய்கறி சந்தை இருக்கிறது. கிணத்துக் கடவு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து அதிகமான தக்காளி எடுத்து வரப்படுகிறது. இதனிடையில் விலை வீழ்ச்சி அடையும் போது தக்காளிகள் வீணாகிறது. இதனை தடுப்பதற்கு தக்காளி மதிப்புகூட்டுப் பொருட்கள் தயாரிக்கப்படுமா..?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் அன்பரசன் “கிணத்துக் கடவு வட்டாரத்தில், 81.50 லட்சம் கிலோ தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வாறு சாகுபடியாகும் தக்காளி, உள்ளூர் பயன்பாட்டிற்கே போதுமான அளவில் இருக்கிறது. ஆகவே தக்காளியை பயன்படுத்தி மதிப்புகூட்டுப் பொருட்கள் தயார்செய்ய, தனியார் தொழில் முனைவோர் முன் வந்தால் அரசு மானியத்துடன்கூடிய கடன் வழங்கும்” என்று விவாதம் நடந்தது.

Categories

Tech |