Categories
மாநில செய்திகள்

மதிப்பூதியம் பெறுபவர்களுக்கு ரூ.100 வரை உயர்வு…… யாருக்கெல்லாம் தெரியுமா?….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், மதிப்பூதியம் பெறுவோருக்கு தனியாக சிறிது தொகையை உயர்த்தி நீதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து நீதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.2500 வரை பெறும் பணியாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.50 மற்றும் ரூ.2,500 க்கு மேல் பெறும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.100 க்கும் கூடுதலாக வழங்கப்படும்.

இந்த தொகை ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் பணியாற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |