நாடு முழுவதும் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி நடக்க இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் திருப்தியில்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்வதற்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் எந்தவகையில் வழங்குவது என்பது பற்றி சிபிஎஸ்இ இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் தகுந்த சூழல் ஏற்படும்போது தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று சிபிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.