தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்ட பொது பிரிவினர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்க உள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.மற்ற கல்லூரிகளைப் போலவே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திலும் க்யூட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற தொடங்கியது.
இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை பல்கலைக்கழகத்தின் அதிகார பூர்வ இணையதளத்தில் பதிவிட உத்தரவிட்ட நிலையில் அதற்கான கால அவகாசம் செப்டம்பர் 25ஆம் தேதி உடன் முடிவடைகிறது.இந்நிலையில் தற்போது மதிப்பெண்களை பதிவிட செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.