Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மதிமாறனின் “செல்ஃபி” இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா… வெற்றிமாறன் ஓபன் டாக்…!!!

செல்ஃபி திரைப்படத்தை இயக்கிய மதிமாறன் பற்றி வெற்றிமாறன் பேசியுள்ளார்.

வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் தற்போது செல்பி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஸும் கதாநாயகியாக கௌதம் மேனனும் முக்கிய வேடங்களில் வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கத்துரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். செல்ஃபி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விழா நேற்று சென்னையில் நடைபெற்றபோது வெற்றிமாறன் கூறியுள்ளதாவது, “மதிமாறன் ஒரு குறும்படம் என்னிடம் காட்டினார். அதை பார்த்து அவரை நான் உதவி இயக்குனராக ஏற்றுக்கொண்டேன். செல்ஃபி திரைப்படத்தை மதிமாறன் இருபத்தி ஒன்பது நாட்களில் முடித்துள்ளது வியர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை நான் பார்த்தேன். இதில் மதிமாறனின் ரா எனர்ஜி இருக்கின்றது. நான் ஒரு விஷயத்தைப் பற்றி சொல்ல கூடாது என்று நினைத்தேன். அது மதிமாறன் எனது உறவினர். ஆனால் அவர் எந்த இடத்திலும் உறவினர் என்பதை காட்டிக் கொள்ளவில்லை. பலர் என்னிடம் உங்களுக்கு யார் இந்த பெயரை வைத்தார் என கேட்டுள்ளனர். இந்தப் பெயரை நீங்களே வச்சிக்கிட்டிங்களா என கேட்டாங்க. ஆனா இந்த பேர நான் வைக்கில. மதிமாறனின் அப்பாதான் எனக்கு இந்தப் பெயரை வைதார்கள். அவங்க அப்பா எங்க மாமா. எங்க மாமாவுக்கு மாறன் என்ற பெயர் பிடிக்கும். அதனால் எனக்கு வெற்றிமாறன் என்றும் அவருக்கு மதிமாறன் என்று பெயர் வைத்தார். பெயர் வைத்த மாமாவுக்கு நன்றி” என கூறியுள்ளார்.

Categories

Tech |