Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மதிமுக நிர்வாகிகளிடையே தகராறு”…. எதுக்காக தெரியுமா…??? தேனியில் பரபரப்பு….!!!!

தேனியில் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் டிக்கெட் கிடைக்காததால் நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தியேட்டரில் நேற்று மதிமுக சார்பாக வைகோ ஆவணப்பட வெளியிட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பங்கேற்று ஆவணப்படத்தை வெளியிட்டார். இதை தொடர்ந்து திரையரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு திரண்டு வந்திருந்தார்கள். இதில் சிலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என சொல்லப்படுகின்றது. இதனால் நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து துரை வைகோ மற்றும் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்கள். இதன் பின்னர் அவர்கள் ஆவணப்படத்தை பார்த்தார்கள். மேலும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் ஆவணப்படுத்தை பார்த்தார்கள் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |