கோவை காந்திபுரம் பி கே கே மேனன் சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொடர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு பேசிய வைகோ அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கோவை மாவட்டத்தில் மதிமுக செயல்பாடுகள் பற்றிய ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ மதிமுக புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தமிழகத்தின் அரசியல் திசையை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
அதற்கு அடையாளமாக தான் இந்த சுற்றுப்பயணத்தை கொங்கு மண்டலத்தில் தொடங்கி இருக்கின்றேன். இது மதிமுகவின் ஜிப்ரான்டல் கோட்டை என்றார். இங்கு மட்டும் ஒரு லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். மேலும் பொருளாதார பலம் இல்லை என்றாலும் லட்சிய தாகம் இருக்கிறது என கூறியுள்ளார். திமுகவுடன் லட்சிய ரீதியாக மதிமுக உடன்பாடு கொண்டு சனாதன சக்திகளை வீழ்த்த பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகளை வீழ்த்த ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என சொல்லக்கூடிய ஏகாதிபத்திய பாசிச கட்சிகளை வீழ்த்த அண்ணாவின் வழியில் கலைஞர் எவ்வாறு கொள்கைகளை பாதுகாத்து வந்தாரோ அது போலவே திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதல் வருமான ஸ்டாலின் செயல்பட்டு கொண்டிருக்கின்றார்.
தமிழகத்தில் உள்ள திட்டங்கள் போல் எங்கும் அறிமுகப்படுத்தவோ செயல்படுத்தவோ இல்லை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சிக் கொள்கை ரீதியான ஆட்சி திராவிட இயக்க இலட்சிய ரீதியான ஆட்சி என முறையில் செயல்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரி உயர்வு பற்றி கேள்விக்கு பதில் அளித்த அவர் மிகப்பெரிய பாதிப்பிற்கு மக்கள் ஆளாகியுள்ளதாகவும் ஜிஎஸ்டியால் பொதுமக்கள் தான் மிதிக்கப்படுகிறார்களே தவிர அந்த அதானியோ, அம்பானியோ அல்ல என கூறியுள்ளார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினால் அனைத்து பொருட்களும் விலை உயர்வதாக தெரிவித்த அவர், மோடி அரசின் மீது மக்களுக்கு நாள்தோறும் வெறுப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கே பேச வாய்ப்பளிக்க வேண்டும் என வெங்கையா நாயுடு கூறியது பற்றி கேள்விக்கு அது சரிதான் நடுநிலையோடு வெங்கையா நாயுடு அதனை தெரிவித்துள்ளார். அதை ஆளுகின்ற கட்சி பின்பற்றினால் நல்லது என தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு அனைவரது இல்லங்களிலும் கொடியேற்றுவது பற்றி கருத்து கேட்டதற்கு தேசிய கொடியை ஏற்றுவது நல்ல திட்டம் தான். அது வரவேற்கத்தக்கது தான் என கூறியுள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்த் ஆளுநருடன் சந்தித்தது பற்றிய கேள்விக்கு ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை யாருக்கும் புரியவில்லை. ஒருநாள் அரசியலுக்கு வருகிறேன் என சொல்லுகிறார் மறுநாள் உறுப்பினர்களை சேர்க்க சொல்லிவிட்டேன் என கூறுகிறார். பின்பு அரசியலுக்கு வரவில்லை என சொல்லிவிட்டு சென்று விடுகின்றார். அதனால் அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறியுள்ளார்.