தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் ஒருபுறம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு வீதங்களும் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் நோய்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மே 10 முழு ஊரடங்கு அமல்படுத்தியது.
இதையடுத்து மே-24 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர், “கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும், முழு ஊரடங்கை விடுமுறை என கருதி பொதுமக்களில் சிலர் ஊர் சுற்றுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தொடர்பாக மதியம் 1 மணிக்கு அறிவிக்க வேண்டி உள்ளது என்றும் கூறியுள்ளார்.