பள்ளி மாணவர்கள் மது அருந்துவது பெரும் பிரச்சனையாக உள்ளது. இவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க கூறிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கூட சீருடையுடன் டாஸ்மாக்குக்கு சென்று மது அருந்தும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தருகின்றது. பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இல்லையெனில் தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றி அமைக்க கோரிய வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.