Categories
தேசிய செய்திகள்

மதிய உணவில் கிடந்த பல்லி…. 80 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரா தாண்டா என்ற கிராமத்தில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 80 குழந்தைகள் நோய்வாய்ப் பட்டனர். இதையடுத்து இந்த 80 குழந்தைகளைக்கும்  ரானிபென்னுர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு  குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்ததை கண்டு பிடித்தனர். எனவே அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |