Categories
தேசிய செய்திகள்

மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு…. கேரள சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி உத்தரவு…..!!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள காயங்குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இங்கு சென்ற வெள்ளிக்கிழமையன்று மதியஉணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவல் அறிந்ததை அடுத்து பள்ளிக்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்காக சேகரித்தனர். இதேபோன்று கொல்லம் மாவட்டம் கொட்டாக்கரா எனும் இடத்திலுள்ள அங்கன்வாடியில் 8 மாணவிகள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு காரணம் உணவில் விஷத்தன்மையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உணவுப் பாதுகாப்பு ஆணையர் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குநருக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |