குழந்தைகளுக்கான ஒரு மாபெரும் மதிய உணவு திட்டத்தை முதன் முறையாக தமிழ்நாடு தொடங்கியது. பசியோடும், நோயோடும் உள்ள எந்த ஒரு குழந்தையும் கல்வி கற்க முடியாது. இந்த தேவையை உணர்ந்து 1962-64 ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் மதிய உணவு திட்டம்(MDM) தொடங்கப்பட்டது. இந்த மதிய உணவு 3 வகையான மேம்பாடுகளை தருகிறது. அதாவது பள்ளி வருகை, இடையில் விலகுவோரைக் குறைத்தல், குழந்தையின் ஊட்டத்தில் நன்மை போன்றவை ஆகும். இந்த திட்டத்திற்கான தானியங்களை இலவசமாக மத்திய அரசு வழங்குகிறது.
இந்நிலையில் மதிய உணவுத் திட்டத்தால் தான் தமிழ்நாட்டில் அதிக கல்வியறிவு இருப்பதாக தரவுகள் கிடைத்துள்ளது என்று UNICEF தெரிவித்துள்ளது. இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் உளவியல் நலனுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.