முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே ராமவர்மபுரம் பகுதியில் வின்சென்ட் சந்தோஷ் குமார் (63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி பிரிஜித் என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் வின்சென்ட் சந்தோஷ் குமார் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேரி பிரிஜித், வின்சென்ட் சந்தோஷ் குமாரை கண்டித்துள்ளார். தன்னுடைய மனைவிக்கு கண்டித்ததை எண்ணி மனமுடைந்த வின்சென்ட் சந்தோஷ் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வின்சென்ட் சந்தோஷ் குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வின்சென்ட் சந்தோஷ் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன்பிறகு வின்சென்ட் சந்தோஷ் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து நேசமணி நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.