மதுக்கடைக்கு மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தேர்தல் நடைபெறாததால் அங்கு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு கூட்ட நெரிசலில் நிலையூர் மதுக்கடைக்கு சென்று மதுபானங்களை வாங்கி சென்றுள்ளனர்.இதனால் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கூட்டத்தை கட்டுபடுத்தியுள்ளனர்.