Categories
மாநில செய்திகள்

மதுசூதனன் விரைவில் நலம் பெற வேண்டும்…. சசிகலா பேட்டி…!!!

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வயது மூப்பு காரணமாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள அவைத்தலைவர் மதுசூதனனை பார்க்க இன்று சசிகலா சென்றார். இதையடுத்து அவரை சந்தித்த பின்னர் செய்தியாளர்க்ளுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் விரைவில் உடல் நலம் பெற வேண்டும். அதிமுக மீது பற்று கொண்ட இவர் உடல் நலம் குன்றியதை அறிந்து நேரில் வந்து நலம் கேட்டறிந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |