குடும்ப தகராறில் மனமுடைந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு சீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜா குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனையடுத்து மனமுடைந்த ராஜா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக மயக்கமடைந்த ராஜாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக செல்லும் வழியிலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற நாமக்கல் காவல்துறையினர் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.