Categories
தேசிய செய்திகள்

மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி….. பெண்களுக்கு இடையே கடும் மோதல்…. டெல்லியில் பெரும் பரபரப்பு….!!!

மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள டிகிரி பகுதியில் மதுபானக் கடை  செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் பலர் கடையின் முன்பாக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக கடையில் வேலை பார்க்கும் பெண்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட பெண்களை தடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. எனவே ஏராளமான காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டு மோதலில் ஈடுபட்ட 10 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |