கட்டிட தொழிலாளியை நண்பர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள நெசப்பாக்கம் அன்னை சத்யா நகர் பகுதியில் கட்டிட தொழிலாளியான கந்தன்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான மூர்த்தி(30) என்ற நண்பர் உள்ளார். கடந்த 13-ஆம் தேதி நண்பர்கள் இருவரும் கே.கே நகர் அண்ணா மெயின் ரோட்டில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடையில் மதுபானம் குடித்துள்ளனர். அப்போது எனக்கு மதுபானம் வாங்கி தா என கேட்டு மூர்த்தி கந்தனிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு கந்தன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மூர்த்தி கீழே கிடந்த உருட்டு கட்டையால் தொழிலாளியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த கந்தனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.