Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபான கடையில் தீ விபத்து…. ரூ.9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுபான கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை 5 மணிக்கு கடையிலிருந்து கரும்புகை வெளியேறி சிறிது நேரத்தில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், மது பாட்டில்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Categories

Tech |