Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மதுபான பாரில் லாட்டரி சீட்டு விற்பனை”… அ.தி.மு.க பிரமுகர் கைது… போலீஸ் விசாரணை…!!!!

மதுபான பாரில் லாட்டரி சீட் விற்ற அ.தி.மு.க பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை, திருவொற்றியூர் டி.எஸ் கோபால் நகரில் வசித்து வருபவர் அ.தி.மு.க பிரமுகரான ஜோஸ்வா(50). இவருக்கு திருவொற்றியூர் பி.என்.டி குடியிருப்பு ரோட்டில் சொந்தமாக மதுபான பார் இருக்கிறது. இந்த மதுபான பாரியை ரவிசங்கர் என்பவர் மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகின்றார். அந்த பாரில் மது அருந்த வருபவர்களிடம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை வாங்க கட்டாயப்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் திருவொற்றியூர் சடையங்குப்பம் பாட்டை பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் கூலி தொழிலாளி முருகன்(40) என்பவர் கடந்த 27ஆம் தேதி மது அருந்த சென்றார்.

அப்போது அங்கு வேலை செய்த வாலிபர் ஒருவர் முருகனிடம் ஒரு நம்பர் லாட்டரி டிக்கெட் வாங்குமாறு கட்டாயப் படுத்தி உள்ளார். அதை வாங்க முருகன் மறுத்தார். இதனால் முருகனுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சேலம் கெங்கவல்லி பகுதியில் வசித்த 27 வயதுடைய சுரேந்தர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கின்ற உரிமையாளரான ஜோஸ்வா என்பவரை தனிப்படை காவல்துறையினர் பெங்களூரில் கைது செய்து நேற்று முன்தினம் சென்னை கூட்டிவந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |