தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் மதுபானம் வழங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா தொற்றானது நாளுக்குநாள் படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில், தமிழகத்திலும் அதற்கான பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகளில் மதுபானம் வாங்க வருபவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது குறுஞ்செய்தியை காண்பித்து மதுபானம் வாங்கிக் கொள்ளலாம் என்று அந்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அரசு மதுபான விற்பனையாளருக்கு இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். இதனை மீறும் ஊழியர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.