மது குடிப்பதனால் ஏழு வகையான புற்றுநோய் வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மதுப்பழக்கம் என்பது அனைத்து வயதினரிடையேயும் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. மது பழக்கத்தை தொடர்ந்தவர்களால் அதை கைவிடுவது மிகவும் கஷ்டமான ஒன்றாக மாறி விடுகின்றது. மது குடிப்பதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் மது அருந்துவதற்கும் ஏழு வகை புற்றுநோய்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
மது குடிப்பதால் வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் மற்றும் மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. கொஞ்சமாக மது குடித்தாலும் அது தொடர் பழக்கமாக இருக்கும் நிலையில் அது ஆபத்தானது தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.