Categories
தேசிய செய்திகள்

மதுபிரியர்களே ஹேப்பி…! தள்ளுபடி விலையில் மதுபானம்…. எங்கு தெரியுமா…??

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம் மண்ட்சார் நகரில் உள்ள மதுக்கடைகளில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து அம்மாவட்ட கலால் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்ட்சார் நகரில் உள்ள மூன்று மதுக்கடைகளில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட வாடிக்கையாளர்கள் தடுப்பு சான்றிதழ் காட்டினால் 10% தள்ளுபடி விலையில் மது வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |