Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மதுபிரியர்களே…. 3 நாட்கள்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் ஊராட்சி, ஒன்றியங்களில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்-1, ஊராட்சி மன்ற தலைவர்-4, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்-26, என மொத்தம் 31 பதவி இடங்களை நிரப்புவதற்காக இடைத்தேர்தல் நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி முதல் நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 12ஆம் தேதி ஆகிய நாட்களில் வாக்கு என்னும் மையங்களை சுற்றி சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மேலும் டாஸ்மாக் மூலம் நடத்த விட சில்லரை மதுபான கடைகளில் மேற்பார்வையாளர்கள், மது கடைகளும், மது அருந்து இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை மீறி யாரேனும் கடைகள் மற்றும் மது கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பார்வையாளர் பெயரிலும், எப். எல். 3, பார் உரிமையாளர் பெயரிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் ஏன் தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |