Categories
ஈரோடு தேனி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் அட்டூழியம் செய்த பெண்…. அதுவும் பேருந்தில்…. வைரலாகும் வீடியோ….!!!

ஈரோடில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசு போக்குவரத்து கழக பேருந்தில் 50 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் பயணித்த பெண் பயணி ஒருவர் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டதை கவனித்த பயணிகள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். அப்போதுதான் மற்றவர்களுக்கு தெரிந்தது, அவர் போதையில் இருக்கிறார் என்று. மேலும் அவர் ஆபாசமாக பேசியதால் சக பயணிகள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அந்தப் பெண் பயணிகளிடம் மிக மோசமாக நடந்துள்ளார். வயது வித்தியாசம் கூட பார்க்காமல் அவர்களை அடிக்கவும், கீழே தள்ளவுமாக இறந்திருக்கிறார். இந்தநிலையில், இனி இந்தப் பெண்ணுடன் பேருந்தை இயக்கினால் சக பயணிகளுக்கு சிக்கல் என்று நினைத்து, பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் பேருந்தை காவல் நிலையத்திற்கு சென்று நிறுத்தினர். மேலும் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணை காவல் நிலையத்துக்குள் போகுமாறு கோரிய நிலையில் பயணிகளை ஒருமையில் திட்டியபடி, காவல் நிலையத்திற்குள் சென்றார். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மது அருந்திய பெண்ணின் பெயர் சாந்தி என்றும், அவர் தனது வீட்டில் வேலை செய்பவருடன் சேர்ந்து மது அருந்தியதும் தெரியவந்தது. மேலும் இந்தப் பெண்ணைப் பற்றி சக பயணிகள் கூறியதாவது, இந்தப் பெண்ணை முதலில் திருநங்கை என்றுதான் நினைத்தோம். ஆனால் பிறகு தான் தெரிந்தது அவர் பெண் என்று இவ்வாறு கூறியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |