Categories
மாநில செய்திகள்

மதுபோதையில் ஆட்டோ டிரைவர்…..!! 25 அடி உயர மேம்பாலம்….! பின்னாலிருந்தவருக்கு நேர்ந்த கொடூரம்….!!

மதுபோதையில் டிரைவர் ஆட்டோவை ஓட்டியதால் பின்னால் இருந்த பயணி 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வில்லிவாக்கம், திருநகர் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ், டிவி மெக்கானிக் ஆவார். இவர் நேற்று முன் தினம் காலையில் தனது நண்பரை சந்தித்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஆட்டோ பாடி மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த போது, ஆட்டோ ஓட்டுநரான வில்லிவாக்கம் அகத்தியர் நகரை சேர்ந்த பிரபாகரன் மது போதையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோவின் ஆக்சிலரேட்டரை கவனக்குறைவாக இயக்கியதில் அந்த ஆட்டோ மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி கவிழ்ந்தது.

இதில் பின் சீட்டில் அமர்ந்திருந்த பாக்கியராஜ் தூக்கிவீசப்பட்டு, 25 அடி உயர பலத்தில் இருந்து கீழே, சர்வீஸ் ரோட்டில் விழுந்தார். இதைக்கண்டதும் ஆட்டோ ஓட்டுநர் பிரபாகரன், உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், பாக்கியராஜின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

Categories

Tech |