Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மதுபோதையில் இருந்த ஓட்டுநர்…. தலைகுப்புற கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த 2 பேர்….!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து ராஜபாளையம் வழியாக அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை அஜித் குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் திருமூர்த்தி என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார் ராஜபாளையத்தில் வைத்து மது அருந்திவிட்டு லாரியை வேகமாக ஓடியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தேவதானத்திற்கு முன்பாக இருக்கும் வளைவில் திரும்ப முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த லாரியில் படுகாயமடைந்த அஜித்குமார் மற்றும் திருமூர்த்தி ஆகிய இருவரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |