Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி…. மாமியார் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

மாமியார் உள்பட 2 பேரை தொழிலாளி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிந்தலன்தொட்டியில் கூலி தொழிலாளியான ராமன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா(22) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராமன் அடிக்கடி அனிதாவுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் அனிதா அதே பகுதியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று ராமன் குடிபோதையில் அனிதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது ராமனுக்கும் அனிதாவின் தாய் சின்னதாயம்மா(44) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ராமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியாரை குத்தியுள்ளார். அதனை தடுக்க வந்த வெங்கடேசன் என்பவரையும் ராமன் கத்தியால் குத்தினார். இதனால் படுகாயமடைந்த 2 பேரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |