Categories
தேசிய செய்திகள்

“மதுபோதையில் பாலியல் கொடுமை”…. இதெல்லாம் சகஜம்தான்…. ஆந்திர அமைச்சர் சர்ச்சை பேச்சு…..!!!!!

ஆந்திர மாநிலமான விஜயநகரம் ரிங் சாலை அருகே ஓடா காலனியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் விஜயநகரத்திலுள்ள டீக்கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு இளம்பெண்ணின் தாய் டீக்கடையில் பணிபுரிய சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த போலீஸ்காரரின் மகன் செர்ரி (19) மதுபோதையில் வந்து அப்பெண்ணின் வீட்டில் கதவைத் தட்டினார். அப்போது இளம்பெண் கதவைத் திறந்தார். இதையடுத்து உள்ளே சென்ற செர்ரி, இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிதோடு, அவரை பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

இது தொடர்பாக இளம்பெண் டீ கடை உரிமையாளருக்கு செல்போன் வாயிலாக தகவல் கொடுத்தார். அதன்பின் இளம்பெண்ணின் தாய் மற்றும் டீக்கடை உரிமையாளர் வீட்டிற்கு வந்து இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி இளம்பெண்ணின் தாய் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செர்ரியை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று குண்டூரில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஆந்திரமாநில உள்துறை அமைச்சர் தானேடி வனிதா பங்கேற்றார். அப்போது அமைச்சரிடம் செய்தியாளர்கள் ஆந்திராவில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் இதன் மீது அரசின் நடவடிக்கை என்ன என்று கேட்டனர்.

அதற்கு அமைச்சர் வனிதா கூறியதாவது, “ஆண்கள் யாருக்கும், பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும் எனும் எண்ணம் கிடையாது. அவர்கள் மது அருந்துவதால் அவர்களுடைய மனநிலை திடீரென்று வேறுபடுகிறது. இதன் காரணமாகத்தான் ஆங்காங்கே பலாத்காரம் நடைபெற்று வருகிறது. ஆகவே பெண்களாகிய நாம் தான் ஆண்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒரு சில தாய்மார்கள் தங்களது மகள்களை சரியாக வளர்க்காததால் தான் சில இடங்களில் தவறு நடைபெறுகிறது. அத்துடன் ஒருசில இடங்களில் பணத்திற்காகவும் தவறுகள் நடக்கிறது. மது போதையில் பலாத்காரம் நடைபெறுவது சகஜமான ஒன்றுதான்” என்று அவர் கூறினார். இவரது கருத்துக்கு ஆந்திராவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |