புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்கொல்லை பகுதியில் பால்சாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கந்தையா என்ற தம்பி உள்ளார். அவரது மகன் சங்கர்(47). இந்நிலையில் பால்சாமிக்கும், சங்கருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த சங்கர் பால்சாமியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாலசாமியின் தலையில் வெட்டினார்.
இதனால் படுகாயமடைந்த பால்சாமியை அவரது குடும்பத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சங்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.