கொத்தனார் கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே குன்னம்விளை பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் மனமுடைந்த குமரேசன் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் குமரேசன் வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் குமரேசனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் குமரேசனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குமரேசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தக்கலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குமரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.