Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் வீட்டிற்கு வந்த வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிதறால் தெங்குவிளை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(24) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கூலி வேலை பார்க்கும் அஜித் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் வந்த அஜித் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அஜித்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |