Categories
சினிமா தமிழ் சினிமா

“மதுப்பழக்கத்தில் இருந்த பிரபல நடிகை”….. அவரே அளித்த பேட்டி…. வருத்தத்தில் ரசிகர்கள்….!!!

ஆரோக்கியம் போன்ற விஷயங்களை மனதில் வைத்து மது பழக்கத்தை நிறுத்தி விட்டதாக பிரபல மலையாள நடிகை கூறியுள்ளார்.

பிரபல மலையாள நடிகை காயத்ரி சுரேஷ். இவர் தமிழில் ஜி.வி.பிரகாசுடன் 4-ஜி என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் சகாவு, நாம் சில்ரன்ஸ், ஒரே முகம், ஒரு மெக்சிகன் அபரதா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் வெளிப்படையாக பேசினார். அதில் “தனக்கு மது பழக்கம் இருந்தது. மது போதையில் நான் செய்த தவறுகளை மட்டும் கேட்காதீர்கள்.

அதை இப்போது சொல்வது சரியல்ல.  சுயநினைவுடன் அவற்றை நான் செய்யவில்லை. பின்னர் வாழ்க்கை, தொழில், உடல் தோற்றம், ஆரோக்கியம் ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு மது பழக்கத்தை நிறுத்தி விட்டேன். என்னுடன் மஹே என்ற படத்தில் இணைந்து நடித்த அனீஸ் மேனன் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்ததை கேள்விப்பட்டேன். கேள்விப்படும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என்று கூறிவிட முடியாது” என்று தெரிவித்தார்.

Categories

Tech |