நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளில் மதுபானங்களை வாங்கி பயன்படுத்தி விட்டு காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும்,வனப் பகுதியிலும் பேசப்படுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்கள் சுற்றுச்சூழலும் மாசு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் ஒரு காலி மது பாட்டில்களை சேகரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி விற்பனை செய்யப்படும் அனைத்து மது பாட்டில்களில் மேல் கூடுதலாக ஒரு மது பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் செய்யப்படும் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மது பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். அவ்வாறே விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்களை மது பிரியர்கள் மதுபானம் சில்லறை விற்பனை கடைகளில் மீண்டும் கொடுத்து பத்து ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நடைமுறை நீலகிரி மாவட்டத்தில் அமலில் உள்ளது.இந்த மது பாட்டில் திரும்பப் பெறும் நடைமுறையை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்றும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் திட்டத்தை வகுத்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகம் முழுவதும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.