Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரவாயல் – வாலாஜா நெடுஞ்சாலையில் 50% சுங்க கட்டண வசூல் …!!

மதுரவாயல்  வாலஜா நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50% சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டதாகவும், மதுரவாயல் வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளிலும் 50% கட்டணமே வசூலிக்க கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது . இதை மறு ஆய்வு செய்ய கோரி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது , ஐம்பது விழுக்காடு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவால் நாள்தோறும் பதினாறு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இந்த சாலையில் பயணித்து உள்ளாரா ? என கேள்வி எழுப்பினார்.

டெல்லியிலிருந்து மத்திய சாலை போக்குவரத்து துறை செயலாளரை இந்த சாலையில் வேலூர் பொற்கோவிலுக்கு பயணித்து, அறிக்கை தாக்கல் செய்ய சொல்லுங்கள் என தெரிவித்த நீதிபதிகள், உத்தரவை மறு ஆய்வு செய்யக்கூடிய மனுவை தள்ளுபடி செய்தனர் .

Categories

Tech |