Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையிலும் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் முன் களப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு திடீரென மருந்து விற்பனையை நிறுத்தியுள்ளது. முதலில் சென்னையில் மருந்து விற்பனை எழுதப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மதுரை, கோவை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அரசு மருந்தை வழங்க உள்ளதால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரெம்டேசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு முறைப்படுத்தி மருந்தை விற்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Categories

Tech |