மதுரை மாநகராட்சியில் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ள குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகள் 100 லாரிகள் மூலம் அவனியாபுரம், வெள்ளக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று பிரிக்கப்படுகிறது. பகலில் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் விபத்துக்கள் போன்ற காரணத்தினால் இனி 80% லாரிகள் இரவில் இயக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Categories